Friday, July 20, 2007

தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் ""மறைமுக'' நேர்காணல்...

தமிழகத்துக்கு வெளியே நான் வசித்த போதிலும், சென்னையில் பல்வேறு பத்திரிகைகளை சேர்ந்த நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்களிடம் போன் செய்து நான் கேட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். (தகவல் அளித்த நண்பர்கள் மன்னிக்க...)தற்போது தினகரனிலும் சன் டிவியிலும் வெளியாகி வரும் தினமலர் ரமேஷ் அவர்கள் விஷயத்தில் உண்மை என்ன என்று அந்த நிறுவனங்களின் ஊழியர்களிடமே விசாரித்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. ஆகவேதான் இந்த வலைப்பதிவு.

தினமலர் மீது உள்ள வெறுப்பில் சன் டிவி ஒளிபரப்புகிறதா அல்லது அந்த விஷயத்தில் உண்மையிலேயே உண்மை இருக்கிறதா என்று நான் கேட்டதற்கு சன் டிவி நண்பர் கூறியது.

ஒரு வினாடி நேரத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக விளம்பரக் கட்டணம் வசூலிக்கும் எங்களது சன்டிவி, லாபமில்லாமல் ஒரு செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காது. சமீபத்தில் ரூ 10 ஆயிரம் கோடி பி.எஸ்.என்.எல். டெண்டர் ஊழல் தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியால் தனது இமேஜ் பாழ்பட்டுவிட்டதாக ஏற்கனவே பதவி பறிபோன சோகத்திலிருந்த எங்களுடைய அதிபர் திரு. தயாநிதி மாறன் கோபமடைந்தார்.இந்த நேரத்தில்தான் தினமலர் ஊழியர்களிடம் போனில் தவறாக பேசிய முன்னாள் நிருபர் உமா மீது, தினமலர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த உமா, போலீசாரை திசை திருப்புவதற்காக தினமலர் நாளிதழின் ரமேஷ் மீது ஏதோ புகார் சொன்னார். எங்களுடைய சன் டிவி, தினகரன் நிருபரிடமிருந்து, இந்த தகவல் உரிமையாளர்கள் திரு.தயாநிதி மற்றும் திரு.கலாநிதி மாறனிடம் பறந்தது. சரியாக நேரம் பார்த்துக் கொண்டிருந்த எங்களது உரிமையாளர்களான இரு சகோதரர்கள்... உமா பெண் என்பதால் விஷயம் நன்கு எடுபடும் என்பதை அறிந்து... தினகரனிலும் சன் டிவியிலும் தொடர்ந்து உமாவின் குற்றச்சாட்டுகளை வெளியிட உத்தரவிட்டனர். இதற்காகவே அங்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு ஆனது. அதில் தினமலரிலிலிருந்து வந்து தினகரனில் பணியாற்றும் ஊழியர்கள் இடம்பெற்றிருந்தனர். விஷயத்தை பெரிது படுத்தவில்லை என்றால் ஈவ்டீசிங் அளவுக்கு கூட விஷயம் தேறாது, ஆகவே விஷயத்தை கொலை முயற்சி அளவுக்கு கொண்டு போங்கள் என்று இருவரும் எங்களிடம் கூறினார்கள். இந்த மீட்டிங் மூத்த பத்திரிகையாளர்களுடன் தினம் நடக்கிறது. அதில்தான் என்னென்ன புதிய குற்றச்சாட்டுகளை உமாவுக்கு யோசனையாக கூறலாம் என்பது முடிவு செய்யப்படும். ஒரு நிஜமாக நடந்த சம்பவத்தைப் போல் கற்பனை செய்து கொண்டு எழுத வேண்டும் என்பதுதான் அந்த மீட்டிங்கின் போது எங்களுக்கு வழங்கப்பட்ட முடிவு. தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு நிர்பந்தம் அளித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதை கண்காணிக்க தனி நிருபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.சமீபகாலமாக, மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, விற்பனையில் தினகரன் சரிவை சந்தித்து வருகிறது. இந்த உமா விவகாரம் அதை தடுத்து நிறுத்துவதோடு, தினமலருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தித் தரும் என்பதுதான் எங்களது நிறுவனத்தின் இரண்டு சகோதரர்களின் இரட்டை லாப திட்டம்... என்றார் சன் டிவி நண்பர்.

மற்ற பத்திரிகையெல்லாம் ஒரு வரிகூட இதைப் பற்றி எழுதாத போது நீங்கள் மட்டும் ஏன் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு தினகரன் நிருபர் நண்பர் கூறியது...

தினமலரை எப்படியெல்லாம் அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் முன்னரே கட்டுரைகளை தயார் செய்து வைத்துவிடுவோம். அதை உரிய நேரத்தில் பிரசுரிப்பதுதான் எங்களுக்கு இடப்பட்டுள்ள வேலை. இதற்கு மறுப்பு தெரிவித்தால் வேலையில் இருக்கமாட்டோம்.

உமா எப்படிப்பட்டவர், உண்மையிலேயே அவர் பாதிக்கப்பட்டவரா என்று தினமலரில் பணிபுரியும் மற்றொரு நிருபர் கூறியது...

உமாவைப் பொறுத்தவரை அவர் படிக்கும் காலத்திலிருந்தே அவர் டென்ஷன் பேர்வழி என்பது அவருடைய நண்பர்களுக்கு எல்லாம் தெரியும். எந்த நேரத்தில் எதை செய்யப் போகிறார் என்று கூறிவிட முடியாது. அவருடன் பழகும் சக ஊழியர்களிடம் பலமுறை தவறாக பேசியிருக்கிறார். பொதுவாக வெளியில் ரிப்போர்ட்டிங் செல்லும் போது, ஆண் நண்பர்களுடன் அவர் சுற்றுவது வழக்கம். அலுவலகத்துக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் அவரைத் தேடி வந்தனர். இதனால் தினமும் செய்தி அளிப்பது குறைந்தது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு செய்தி அளிக்கத் தொடங்கினார். செய்திகளில் தவறுகள் ஏற்படும் போது, நிர்வாக ஆசிரியர்கள் எழுதியவர்களை தவறுகளை திருத்த சொல்வதும் ஒருவேளை தொடர்ந்து தவறு நடக்கும் பட்சத்தில் கண்டிப்பதும் இயல்புதான். இதனால் தொடர்ந்து தவறு செய்த உமா கண்டிக்கப்பட்டார். இதனால் அவர் நிர்வாகி மீது தனிப்பட்ட முறையில் கோபம் கொண்டார். தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரு கண்களும் போக வேண்டும் என்ற நினைப்பில், அவர் என்ன செய்கிறோம் என்றே புரியாமல் செய்து கொண்டிருக்கிறார்... என்றார் தினமலர் நண்பர்...இன்னும் கூடுதல் தகவலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...

6 comments:

Unknown said...

இவர்களைப் பற்றி தெரியாதா?

சன் டிவி கலாநிதி, தயாநிதி ஆகிய ஆட்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தினமலர் ரமேஷ் விஷயத்தில் இல்லாததை இவ்வளவு பெரிதாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவை இவர்கள் கேவலமாக விமர்சனம் செய்து, படத்தை ஓடாமல் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஒளிபரப்பு உரிமை தரப்படாவிட்டால் எந்த அளவுக்கு போவார்கள் என்பதும் தெரிந்ததுதான். அந்த படத்தை ஓய்த்துவிடுவார்கள் என்பதை பல காலகட்டத்தில் நாம் பார்த்தது.
இவர்கள் சினிமா விமர்சனம் செய்யும் விதத்தையும், சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலரை இவர்கள் கிண்டல் செய்ததையும் பார்த்திருக்கிறோம். இதனால்தான் இதுவரை இவர்கள் அந்த சேனல் பக்கம் அண்டுவதே இல்லை. இதுபோன்று ஏராளமான விஷயங்களை சொல்லலாம்.
இன்று தினமலர் ரமேஷ் மீது கேரக்டர் அஸாஸினேஷன் செய்துள்ள சன் டிவி தினகரன், இதற்கு முன் மதுரை அழகிரியையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்தது. நாளை ஸ்டாலினையோ அல்லது கனிமொழியையோ செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். தங்களுக்கு அல்லது தனது தம்பியின் அரசியல் எதிர்காலத்துக்கு இடைஞ்சல் என்று கருதி நிச்சயம் கலைஞர் காலத்துக்குப் பிறகு அவர்களையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்து ஒழிப்பார்கள் என்பது நிச்சயம். இந்த சம்பவத்தை உணர்ந்து கொள்ள வேண்டியவர்கள் கனிமொழி, ஸ்டாலின் மற்றும் அழகிரிதான்.
தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோரின் உள்ளே உள்ள குணத்தை வெளிக்காட்டிய சம்பவம்தான் இது.
எந்த பெண்ணையேனும் யார் மீதும் ஒரு கம்ப்ளெயின்டை கொடுக்க வைத்து ஏதோ ஒரு காரணத்துக்காக ஸ்டாலின் அலுவலகத்தில் சந்திக்க வைத்து ஸ்டாலின் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று பேட்டி கொடுக்க வைத்து, டிவியில் ஒளிபரப்புவார்கள் என்பது நிச்சயம்.
இன்று இதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் தனக்கு தி.மு.க.,வின் கதவு மீண்டும் திறக்கும் என்று வாலை ஆட்டிக் கொண்டு காத்திருப்பதால்தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.

- Subramanyam

ரவி said...

அடப்பாவமே...!!!

இது தெரியாமலா நான் அந்துமணியை எத்தால அடிக்கலாம் என்றெல்லாம் பதிவு எழுதினேன்...

அந்துமணி ரொம்ப நல்லவர்தான் போலிருக்கு...

பதிவுக்கும் பாசத்துக்கும் நன்றி நன்பரே..

எவனோ ஒருவன் said...

போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

Anonymous said...

World Of Warcraft gold for cheap
wow power leveling,
wow gold,
wow gold,
wow power leveling,
wow power leveling,
world of warcraft power leveling,
wow power leveling,
cheap wow gold,
cheap wow gold,
maternity clothes,
wedding dresses,
jewelry store,
wow gold,
world of warcraft power leveling
World Of Warcraft gold,
ffxi gil,
wow account,
world of warcraft power leveling,
buy wow gold,
wow gold,
Cheap WoW Gold,
wow gold,
Cheap WoW Gold,
wow power leveling
world of warcraft gold,
wow gold,
evening gowns,
wedding gowns,
prom gowns,
bridal gowns,
oil purifier,
wedding dresses,
World Of Warcraft gold
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow power level,
wow power level,
wow power level,
wow power level,
wow gold,
wow gold,
wow gold,
wow po,
wow or,
wow po,
world of warcraft gold,
cheap world of warcraft gold,
warcraft gold,
world of warcraft gold,
cheap world of warcraft gold,
warcraft gold,buy cheap World Of Warcraft gold
Maple Story mesos,
MapleStory mesos,
ms mesos,
mesos,
SilkRoad Gold,
SRO Gold,
SilkRoad Online Gold,
eq2 plat,
eq2 gold,
eq2 Platinum,
EverQuest 2 Platinum,
EverQuest 2 gold,
EverQuest 2 plat,
lotro gold,
lotr gold,
Lord of the Rings online Gold,
wow powerleveling,
wow powerleveling,
wow powerleveling,
wow powerleveling,world of warcraft power leveling
ffxi gil,ffxi gil,ffxi gil,ffxi gil,final fantasy xi gil,final fantasy xi gil,final fantasy xi gil,final fantasy xi gil,world of warcraft gold,cheap world of warcraft gold,warcraft gold,world of warcraft gold,cheap world of warcraft gold,warcraft gold,guildwars gold,guildwars gold,guild wars gold,guild wars gold,lotro gold,lotro gold,lotr gold,lotr gold,maplestory mesos,maplestory mesos,maplestory mesos,maplestory mesos, maple story mesos,maple story mesos,maple story mesos,maple story mesos,
f3j6s7zo

Anonymous said...

World Of Warcraft gold for cheap
wow power leveling,
wow gold,
wow gold,
wow power leveling,
wow power leveling,
world of warcraft power leveling,
world of warcraft power leveling
wow power leveling,
cheap wow gold,
cheap wow gold,
buy wow gold,
wow gold,
Cheap WoW Gold,
wow gold,
Cheap WoW Gold,
world of warcraft gold,
wow gold,
world of warcraft gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold
buy cheap World Of Warcraft gold v3w6j7qn

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in